ஒடிசா ரயில் விபத்து: சிதைந்த தண்டவாளங்களில் கண்டெடுக்கப்பட்ட அழகிய காதல் கடிதங்கள்
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து நபர் ஒருவருக்கு சொந்தமான காதல் கடிதங்கள் எழுதப்பட்ட நோட்டு புத்தகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்திற்கான காரணம்
ஒடிசாவின் பாலாசூர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நேற்று நிறைவடைந்த நிலையில் இந்த கோரமான ரயில் விபத்துக்கு என்ன காரணம் என்பதை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதில் இந்த மோசமான ரயில் விபத்திற்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்-கில் ஏற்பட்ட கோளாறு காரணம் என்று தெரிவித்துள்ளார், அத்துடன் விபத்திற்கான முழு விபரங்களும் அறிக்கையாக வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட காதல் கடிதம்
இந்நிலையில் ரயில் விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி போன இடத்தில் இருந்து உணர்வு பூர்வமான காதல் கடிதங்கள் எழுதப்பட்ட நோட்டு புத்தகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டு புத்தகத்தில் சிவப்பு, நீலம், பச்சை மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் வரைப்பட்ட படங்களுடன் சேர்த்து கைகளால் எழுதப்பட்ட காதல் கவிதைகள் இடம்பெற்றுள்ளது.
கவிதை ”சிறிய மேகங்கள் மழையை உருவாக்கும், சிறிய கதைகள் காதலை உருவாக்கும்” என்பது போன்ற கவிதைகள் அதில் எழுதப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த கவிதையை யார் எழுதினார் என்பதும், யாருக்காக எழுதப்பட்டது என்பதும் தெரியவில்லை, மேலும் இந்த நோட்டு புத்தகத்தை வைத்து இருந்தவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா என்பதும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.