முதன்முறையாக வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து!
போபாலில் இருந்து டெல்லி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து
இன்று காலை போபாலில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டி ஒன்றில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Vande Bharat train from Bhopal to Delhi catches fire today morning at around 7:15am. Was on board but by God’s grace everyone is safe!#VandeBharatExpress #traincatchesfire pic.twitter.com/8k5uHDn7lT
— Nupur Singh (@NupurSiingh) July 17, 2023
மத்திய பிரதேசத்தில் உள்ள ஹபீப்கஞ்ச் என்று அழைக்கப்படும் ராணி கமலாபதி நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள நிஜாமுதீன் நோக்கி சென்ற போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது, பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் ரயில் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
Fire breaks out in a coach of the Delhi-Bhopal Vande Bharat train near Bina in MP.
— Prashant Kumar (@scribe_prashant) July 17, 2023
Authorities say: All Passengers are safe. No injury. Fire is limited to Battery Box Only. After examination train will be dispatched soon. pic.twitter.com/Gqb9cauj8H
வைரலாகும் வீடியோவில், சிலர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலுக்கு வெளியே சில பயணிகள் காத்திருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கமலாபதி மற்றும் டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் இயக்கப்படும் இந்த ரயிலானது 7 மணி 30 நிமிடங்களில் 701 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது.
Fire in battery box of #VandeBharatExpress Bhopal Delhi train, no injuries, all passengers safe.pic.twitter.com/Z4su34fTNN
— Rajendra B. Aklekar (@rajtoday) July 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |