ஆடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதல்! ஆத்திரத்தில் ரயில் மீது கல்லெறிந்த 3 பேர் கைது
உத்திர பிரதேச மாநிலத்தில் ஆடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதற்காக, ரயில் மீது கற்களை வீசிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்
உத்திர பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22549) பாஸ்வான் என்பவரின் ஆடுகள் மீது ஜூன் 9 ஆம் திகதி மோதியுள்ளது. அதில் 6 ஆடுகள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ல் சிக்கி உயிரிழந்தது.
இச்சம்பவத்திற்குப் பிறகு பாஸ்வானுக்கு கடும் கோபம் வந்துள்ளது. இந்த காரணத்திற்காக, ஜூலை 11 ஆம் தேதி லக்னோ நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, அவர் தனது மகன்கள் அஜய் குமார் மற்றும் விஜய் குமார் ஆகியோருடன் சோஹாவால் மற்றும் தேவ்ரா கோட் இடையே ரயில் மீது கற்களை வீசியுள்ளனர்.
ரயிலில் உடைந்த ஜன்னல் கண்ணாடிகள்
இவர்களின் தாக்குதலால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி எண் சி1, சி3 மற்றும் எக்ஸிகியூட்டிவ் கோச்சின் நான்கு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இந்த திடீர் சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்து, பெட்டிக்குள் பீதி ஏற்பட்டது. ஆனால், ரயிலில் உள்ள பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) இன்ஸ்பெக்டர் சோனு குமார் சிங்,"நேற்று காலை காலை 9 மணியளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரௌனாஹி காவல் நிலையப் பகுதியின் சோஹாவால் பகுதி வழியாகச் சென்றபோது அதன் இரண்டு பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.
இருப்பினும், வந்தே பாரத் ரயில் லக்னோ வரை தனது பயணத்தைத் தொடர்ந்தது என்றும் அவர் கூறினார்.
கைது செய்த பொலிசார்
ரயில் மீது கல்லெறிந்த விவகாரம் தொடர்பாக ரௌனாஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லகௌரியைச் சேர்ந்த பாஸ்வான் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அஜய், விஜய் ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
आज दिनांक 11.07.2023 को थाना रौनाही क्षेत्रान्तर्गत वन्दे भारत ट्रेन पर पत्थर फेंकने की घटना के संदर्भ में पुलिस द्वारा की जा रही कार्यवाही के सम्बन्ध में #SSP_अयोध्या @NayyarRajkaran की बाइट। #ayodhyapolice #UPPolice @RailMinIndia @RPF_INDIA pic.twitter.com/tElda7yedu
— AYODHYA POLICE (@ayodhya_police) July 11, 2023
முன்னதாக கோரக்பூர் மற்றும் லக்னோவை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை ஆம் திகதி தொடங்கி வைத்தார்.
எனினும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு சம்பவம் இது முதல் முறையல்ல. முன்னதாக பிப்ரவரி 26 ஆம் திகதி மைசூர் சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு நடந்தது. கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் இடையே இந்த சம்பவம் நடந்தது.
Mint
மேலும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டன. இது தவிர கேரளாவிலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |