முதியோர் இல்லத்திலிருந்த இராணுவ வீரரை கடித்தே கொன்ற நெருப்பு எறும்புகள்... வழக்கு தொடர்ந்துள்ள உறவினர்கள்
அமெரிக்காவில் நெருப்பு எறும்புகள் கடித்ததால் முன்னாள் இராணுவத்தினரான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அவர் தங்கியிருந்த முதியோர் இல்லம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அட்லாண்டாவுக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் முன்னாள் இராணுவத்தினருக்கான முதியோர் இல்லம் ஒன்று உள்ளது.
அங்கு Joel Marrable (74) என்ற முதியவர் தங்கியிருந்தார். ஏற்கனவே புற்றுநோயால் அவதியுற்றுவந்த Joelஐ, ஒரு நாள் நூற்றுக்கணக்கான நெருப்பு எறும்புகள் கடித்துள்ளன.
முதியோர் இல்லத்திலுள்ளவர்கள் அவரை குளிக்கவைத்து வேறொரு அறைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
பின்னர் மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் அவரை அவர் முன்பிருந்த அறைக்கு மாற்ற, மீண்டும் அவரை நூற்றுக்கணக்கான எறும்புகள் கடிக்க, இரண்டு நாட்களுக்குப் பின் அவர் உயிரிழந்துள்ளார்.
அரசு காப்பகம் ஒரு முன்னாள் இராணுவ வீரரையே ஒழுங்காக கவனிக்கவில்லை என்று கூறி, Joelஇன் மூன்று பிள்ளைகளும், அமெரிக்க அரசு மீதும், பூச்சிகளை கட்டுப்படுத்தும் நிறுவனம் ஒன்றின்மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
அவர்கள் மூவரும், தங்களுக்கு ஆளுக்கு 10 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
இதற்கிடையில், அந்த முதியோர் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த முதியோர் இல்லம் முதியோர்களை கவனித்துக்கொள்ள ஏற்றதல்ல என்று கூறி, அதை மூடிவிட்டனர் அதிகாரிகள்.
அதன் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த முதியோர் இல்லத்திலிருந்தவர்கள் வேறு இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.


