டொமினிக்கன் குடியரசின் சொகுசு சுற்றுலா விடுதியில் பயங்கர தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
டொமினிக்கன் குடியரசில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சொகுசு விடுதியில் தீ விபத்து
டொமினிக்கன் குடியரசின் பாயாஹிப்(Bayahibe)கடற்கரையில் அமைந்துள்ள விவா டொமினிகஸ் பீச் பை விண்டம் சொகுசு விடுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தை தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த 1,700 சுற்றுலாப் பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இத்தாலியைச் சேர்ந்த 46 வயதான பெண் சுற்றுலா பயணி பிரான்செஸ்கா வாலண்டினோ இந்த தீ விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தீ விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த விருந்தினர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் 6 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டது.

விபத்தை தொடர்ந்து விவா டொமினிகஸ் பீச் பை விண்டம் சொகுசு விடுதியில் இருந்த நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் உடனடியாக அருகிலுள்ள மாற்று விடுதிக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |