லண்டனில் குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்
Fire at East London residential building One dead: கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லண்டனில் தீ விபத்து
லண்டனின் பிளாக்வால் வே(Blackwall Way) பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் 17 வது மாடியில் தீ பற்றியது தொடர்பாக அதிகாலை 4.35 மணிக்கு அவசர உதவிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள், 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி காலை 6.41 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் தீ பரவிய 17வது மாடியின் பாதி பரப்பளவு தீயில் எரிந்து சேதமடைந்தது.
உயிரிழப்புகள் மற்றும் காயம்
மருத்துவ சேவையினரின் துரித நடவடிக்கைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் மொத்தம் 4 பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |