குடியேற்ற தடுப்பு மையத்தில் தீ விபத்து:டஜன் கணக்கானோர் பலி! அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பதற்றம்
மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டஜன் கணக்கானோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடியேற்ற தடுப்பு மையத்தில் தீ விபத்து
அமெரிக்க எல்லையில் உள்ள மெக்சிகோ நகரத்தின் குடியேற்ற தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தகவல் வெளியிட்டுள்ளன.
நள்ளிரவுக்கு முன்னதாக ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
Reuters
INM செய்தியாளர்களை AFP தொடர்பு கொண்டு கேட்ட போது தீ விபத்தை உறுதி செய்தனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட தகவல் வெளியிட மறுத்துவிட்டனர்.
இருப்பினும் Ciudad Juarez உள்ள தேசிய இடம்பெயர்வு நிறுவனத்தின் (INM) வாகன நிறுத்துமிடத்தில், போர்வையால் மூடப்பட்ட பல உடல்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் குவித்ததை AFP செய்தியாளர்கள் கண்டுள்ளனர்.
Twitter
அத்துடன் உள்ளூர் ஊடகங்கள் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்து இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
வெனிசுலாவை சேர்ந்தவர்கள்
இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மீட்பு பணியாளர்களில் ஒருவரிடம் செய்தியாளர்கள் பேச முயன்றனர்.
Reuters
அப்போது விபத்து நிலவரம் குறித்து பேசுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்பதால் என்னை அடையாளப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அத்துடன் விபத்து இடத்தில் சுமார் 70 புலம்பெயர்ந்தோர் இருந்தனர் என்றும், பெரும்பாலும் அவர்கள் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் என்றும் விளக்கினார்.