தெற்கு லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: பதின்ம வயது சிறுவன் உயிரிழப்பு
தெற்கு லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் தீ விபத்து
லண்டனின், சவுத்வார்க்(Southwark) பகுதியில் கூப்பர்ஸ் சாலையில் உள்ள 6 மாடி குடியிருப்பின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் துரதிர்ஷ்டவசமாக பதின்ம வயது சிறுவன் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்தானது ஓல்ட் கென்ட் ரோடு தீயணைப்பு நிலையத்திற்கு அருகில் நடந்து சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மொத்தம் இரண்டு சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தீயணைப்பு துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மதியம் 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மாலை 4.30 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து தொடர்பான விசாரணையை லண்டன் மாநகர காவல்துறை மற்றும் தீயணைப்பு ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |