ஈராக் மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி, 30 பேர் படுகாயம்
fire at power station in southern Iraq 4 dead: தெற்கு ஈராக்கில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து
சனிக்கிழமை தெற்கு ஈராக்கில் உள்ள Hartha மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவத்தில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 30 பேர் வரை படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

🇮🇶⚡️ An hour ago, a large gas explosion occured at the Al-Hartha Thermal Power Station, Basrah Governorate, southern Iraq. A fire subsequently occured, causing several firefighting teams to be deployed. -ResistanceTrench Who owns this field? I'm not sure whether to celebrate or be angry. Too tired. I haven't slept much.
— concerned american (@biteme_suckas) November 21, 2026
அத்துடன் இந்த தீ விபத்தை தொடர்ந்து சுமார் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட Hartha மின் உற்பத்தி நிலையத்தில் செயல்பாடுகள் முழுமையாக முடங்கியுள்ளது.
தீ விபத்துக்கான காரணத்தை புலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மின் உற்பத்தி நிலையத்தில் பற்றிய தீ அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு பரவுவதற்குள் தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக ஈராக் செய்தி நிறுவனம் INA தகவல் வெளியிட்டுள்ளது.