ரஷ்ய இரகசிய இராணுவ ஆராய்ச்சி மையத்தில் மர்மமான முறையில் பற்றிய தீ: ஜன்னல் வழியாக குதித்த ஆய்வாளர்கள்
ரஷ்யாவுக்குச் சொந்தமான அதி இரகசிய இராணுவ ஆராய்ச்சி மையத்தில் தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு மேற்கே அமைந்துள்ள Tver என்ற இடத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான அதி இரகசிய ஆராய்ச்சி மையம் ஒன்று உள்ளது.
புதிய விண்வெளி உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் அந்த ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள கட்டிடத்தில் நேற்று மதியம் மர்மமான முறையில் தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நான்கு இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தீயிலிருந்து தப்புவதற்காக ஜன்னல் வழியாக குதித்துள்ளார்கள்.
Iskander வகை ஏவுகணைகள் தயாரிக்கும் அந்தக் கட்டிடத்தில் எதனால் தீப்பற்றியது என்பது தெரியாத நிலையில், அங்கிருந்து நச்சுத்தன்மை கொண்ட நீலமும் கருப்பும் கலந்த வண்ணத்தில் புகை எழுந்துள்ளது.
அது ரசாயனத்தால் எழுந்த புகையா அல்லது தீயால் எழுந்த புகையா என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்திற்குள், Kineshma என்ற இடத்தில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய ரசாயன ஆலையான Dmitrievsky Chemical Plant என்னும் இடத்திலும் தீப்பற்றியுள்ளது.
அங்கும் தீப்பற்றியதற்கான காரணம் தெரியாத நிலையில், அங்கு பணி புரிந்த சுமார் 150 பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆலை உக்ரைன் எல்லையிலிருந்து 1,000 கிலோமீற்ரர் தொலைவுக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.