ஓடும் ரயிலில் பயணிகள் மீது திரவத்தை தெளித்து தீ வைத்த மர்ம நபர்! பரபரப்பு வீடியோ
ஜப்பானில் ஓடும் ரயில் மர்ம நபர் ஒருவன் பயணிகள் மீது எரியக்கூடிய திரவத்தை தெளித்து தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோவின் Shinjuku-வை புறநகர் நகரமான Hachiōji உடன் இணைக்கும் தனியாருக்கு சொந்தமான ‘Keiō Line’ ரயிலிலே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
மர்ம நபர் கத்தியை கொண்டும் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தாக்குதலில் சுமார் 15 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக முற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயிலில் நபர் ஒருவர் திடீரென பயணி ஒருவர் மீது திரவத்தை தெளித்து தீ வைத்தார், ரயில் உடனே நிறுத்தப்பட்டது, பயணிகள் ஜன்னல்களை உடைத்து அதன் வழியாக ரயிலிருந்து வெளியேறி Kokuryō நிலையத்திலிருந்து தப்பி ஓடினார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரும் தப்பி ஓடிவிட்டார் என சம்பவத்தின் போது ரயில் இருந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
乗ってた電車で液体まいて人燃やした人がいて、電車急に止まってみんな窓から出て、やった人は逃げてるって……
— ayase(ʕ͡تʔぬん) (@III0305III) October 31, 2021
国領駅 pic.twitter.com/9JzDE07xvH
தலைநகர் டோக்கியோவின் மேற்கு நகரமான Chofu நகரில் உள்ள Kokuryō ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
京王線火災で逃げる人々 pic.twitter.com/ZfN1pD0C2V
— しずくβ (@siz33) October 31, 2021
ரயிலில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் ஏதற்காக இப்படி செய்தார் என்பது இன்னும் தெரியவரவில்லை.
اليابان.. إصابة ستة أشخاص بجروح في هجوم نفذه رجل داخل قطار في #طوكيو #إرم_نيوز #tokyo #japan pic.twitter.com/s97XP5o0rQ
— إرم نيوز (@EremNews) October 31, 2021