மான்செஸ்டரில் பயங்கர தீ விபத்து: 4 வயது சிறுமி பலி! பெண் ஒருவர் கைது
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் நடந்த தீ விபத்தில் 4 வயது சிறுமி பலியான நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மான்செஸ்டரில் தீ விபத்து
மான்செஸ்டர் நகரில் ஏற்பட்ட துயரமான தீ விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 44 வயது பெண் தீ வைத்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, கேட்ஸ்ஹெட் க்ளோஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதியம் 12:35 மணியளவில் அவசரகால சேவைகள் வரவழைக்கப்பட்டன.
தீப்பிடித்த வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்பு பணியாளர்கள் மீட்டனர், இருப்பினும் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெண் கைது
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுமிக்கு தெரிந்தவர் என்றும், அவர் தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணங்களை தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக விசாரித்து வருவதால், கேட்ஸ்ஹெட் க்ளோஸ் பகுதியைச் சுற்றி காவல் துறை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |