உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு என்ன?
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு பில்லியனரா? அவரது உண்மையான சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம்.
கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் மற்றும் ரஷ்யா வெளியிட்ட தகவல்களில், ஜெலென்ஸ்கி ஒரு பில்லியனர் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இது உண்மையல்ல என்று கூறப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் () மொத்த சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கலைத் துறையில் இருந்து அரசியலுக்கு...
ஜெலென்ஸ்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர், நகைச்சுவை கலைஞர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியதன் மூலம் பெரும் வருமானம் ஈட்டினார்.
1997-ல், அவர் Kvartal 95 என்ற நகைச்சுவை குழுவை நிறுவினார். இது, பின்னர் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக மாறியது.
அவரது "Servant of the People" (2015-2019) என்ற தொலைக்காட்சி தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இத்தொடரில், ஒரு சாதாரண ஆசிரியர் எதிர்பாராத விதமாக உக்ரைன் ஜனாதிபதியாகும் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு புகழுடன் பெரிய வருமானத்தையும் சேர்த்தது.
Kvartal 95 நிறுவனம் வருடத்திற்கு $30 மில்லியன் வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
2019-ல் அவர் ஜனாதிபதி ஆன பிறகு, தனது பங்குகளில் 25 சதேவீத உரிமையை நண்பர்களிடம் ஒப்படைத்தார்.
அந்த பங்கின் மதிப்பு 11 மில்லியன் டொலர் என மதிப்பிடப்படுகிறது. அவர் தலைமை முடிந்த பிறகு அதை மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெலென்ஸ்கியின் சொத்துக்கள்
அவர் உக்ரைனில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கினார்.
மேலும், இத்தாலியில் (Forte dei Marmi) 4 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு வில்லா வாங்கினார், ஆனால் அடுத்த ஆண்டே அதை விற்றுவிட்டார்.
கீவ் நகரத்தில் சில கூட்டுறவு சொத்துகள் மற்றும் ஒரு சிறிய வணிக கட்டிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் காரணமாக சொத்துமதிப்பு குறைந்ததா?
ஜனாதிபதியாகிய பிறகு, அவர் பெறும் மாத சம்பளம் வெறும் 28,000 Ukrainian hryvnia (சுமார் 930 டொலர்), வருடத்திற்கு 11,000 டொலர் மட்டுமே. இது, இவரது பொழுதுபோக்கு துறையில் பெற்ற வருமானத்தை விட மிகக் குறைவு.
2020-ஆம் ஆண்டு அவரது வருமானம் 623,000 டொலர் என பதிவாகியது. இது பெரும்பாலும் Kvartal 95 நிறுவனத்தின் ராயல்டி வருவாயிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 2022-ல் ரஷ்யா உக்ரைனை கைப்பற்ற முயன்ற பிறகு, தொழில் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அவரது வருமானம் மேலும் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
செலன்ஸ்கியின் சொத்து மற்றும் வருமானம் அவரது அரசியல் வாழ்க்கையால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மிகப்பெரிய தொழில் அதிபராக அல்ல, ஆனால் நல்ல பணக்காரராக இருக்கிறார்.
அதே நேரத்தில், அவர் பில்லியனர் என ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையல்ல, வதந்திகள் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukrainian President Volodymyr Zelensky Net Worth, Volodymyr Zelenskyy Net Worth, Zelenskyy Salary