தாய் இறந்ததற்கு ரூ.83 லட்சம் காப்பீடு வேண்டும்.., ஏமாற்ற முயன்ற இந்தியரின் உண்மை அம்பலம்
தனது தாய் தீ விபத்தில் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரூ.83 லட்சம் காப்பீடு
இந்திய மாநிலமான பீஹார், பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் கடந்த 25 -ம் திகதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகளும் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் தனது தாய் சுமன் லாலும் இறந்துவிட்டார் என்று அமெரிக்கவாழ் இந்தியர் அங்கித் லால் என்பவர் இந்தியர் காப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, அவரது தாயின் பெயரில் இறப்புச் சான்றிதழும் சமர்ப்பித்தார். அது பாட்னா மாநகராட்சி பெயரில் இருந்துள்ளது.
நிறுவனம் புகார்
இந்நிலையில், அமெரிக்க காப்பீட்டு நிறுவனமானது சுமன் லால் இறந்ததை விசாரிக்க தனது அதிகாரியை பாட்னாவுக்கு அனுப்பியது. அப்போது பாட்னா காவல் நிலையம் சென்று விசாரித்த போது தான் அந்த பெயரில் யாரும் இறக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதனை அந்த உணவக உரிமையாளரும் உறுதி செய்துள்ளார். இதனால், அங்கித் லால் முறை கேடாக காப்பீட்டுத் தொகைபெற முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அங்கித் லால் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் புகார் அளித்துள்ளது. இதனால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |