நின்றிருந்த ரயிலில் தீ விபத்து! சமையல் சிலிண்டர் வெடித்ததால் 9 பேர் பலியான சோகம்
தமிழக மாவட்டம், மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் பெட்டியில் தீ விபத்து
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் உள்ள ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் தீ வேகமாக பரவியது. இதில், ரயில் பெட்டியில் இருந்தவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள், உத்தர பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா செல்ல வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
என்ன காரணம்?
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா செல்ல வந்தவர்கள் சமையல் சிலிண்டர் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள், அதிகாலையில் தேநீர் சமைக்க முயன்ற போது சமையல் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற முதற்கட்ட தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், ரயிலில் தீ விபத்து பற்றியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா, ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
? 8 killed and 20 injured as parked tourist train catches fire near Madurai Railway Station
— Rohit Mehta (@rohitmehta0) August 26, 2023
The Southern Railways said the passengers in a private party coach "illegally smuggled" a gas cylinder and this caused the fire. #TrainAccident #trainaccident #TRAINFIRE #Madurai pic.twitter.com/LIrM0nVUHw
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |