பிரித்தானியாவில் வீடொன்றில் பயங்கர தீ விபத்து: பறிப்போன குழந்தையின் உயிர்
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்து சம்பவத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட் அருகே உள்ள ஹாம் ஸ்ட்ரீட்(Hamstreet) கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்து இருப்பதுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்புப் பணிகள்
தீ விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உயரமான ஏணி வாகனத்தை அனுப்பி வைத்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர்.
சம்பவ இடத்தில் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, இருப்பினும் தீயணைப்பு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தீ விபத்து சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
எனவே இதன் பின்னணி குறித்து தீயணைப்பு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |