இலங்கை கடலில் தீ பிடித்த சரக்கு கப்பல்! என்ன நிலவரம்? இந்திய கடற்படை வெளியிட்ட புகைப்படம்
இலங்கை கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் Great Basses Reef கலங்கரை விளக்கத்திலிருந்து 480 கடல்மைல் தொலைவில் பயணிக்கும் MSC Messina எனும் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
MSC Messina கப்பலின் இன்ஜின் அரையில் தீ பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைபீரிய கொடியுடனான MSC Messina சரக்கு கப்பல், கடந்த ஜூன் 23ம் திகதி கொழும்பில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுள்ளது.
MSC Messina சரக்கு கப்பல் 4743 கண்டெய்னர்களை சுமந்த செல்லும் திறன் கொண்டது என இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
MSC Messina கப்பலில் மொத்தம் 28 பேர் பயணித்ததாகவும், தீ விபத்தை தொடர்ந்து ஒருவரை காணவில்லை என இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவயிடத்திற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
#SAR Container ship #MSCMessina with 28 crew about 425nm from #PortBlair reported fire in engine room AM 25 Jun & one crew missing. Vessel enroute from #Colombo to #Singapore. MRCC P'Blair coordinating assistance through #MSCDeila in vicinity. #ICG Ship & aircraft being deployed. pic.twitter.com/Bq7KNvKtR1
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 25, 2021
சில தினங்களுக்கு முன் இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்கு சில மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற எண்ணெய் கப்பல், தீ விபத்து காரணமாக முற்றிலும் எரிந்து கடலில் மூழ்கியது நினைவுக் கூரத்தக்கது.