உடல் நசுங்கிய நிலையில் மகளை மீட்ட தீயணைப்பு வீரர்; புளோரிடா குடியிருப்பு இடிபாட்டில் அதிகரிக்கும் சோகம்!
புளோரிடா மாகாணத்தில் இடிந்து தரைமட்டமான 12 மாடி குடியிருப்பின் இடிபாடுகளில் நேற்று மீட்கப்பட்ட 2 சடலங்களில் ஒன்று, தீயணைப்பு வீரரின் 7 வயது குழந்தையின் உடல் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் மியாமி அருகே சர்ப்சைடு (Surfside) பகுதியில் இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
உலகையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் இதுவரை 22 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், மேலும் 126 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை.
மீட்பு பணியின் 9-வது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 2 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் ஒருவர் அடையாளம் காணப்படவில்லை.
மற்றோருவர் 7 வயது சிறுமி Stella Cattaross, அவர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரரின் குழந்தை என தெரியவந்த நிலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் தந்தை மற்றும் மாமா இருவரும் தீயணைப்பு வீரர்கள் ஆவர். ஜூன் 24-ஆம் திகதி கட்டிடம் இடிந்து விழுந்தநேரத்தில் இருவரும் தங்கள் பணியில் இருந்துள்ளனர்.
தனது குழந்தையின் உடலை பெற்ற தீயணைப்பு வீரர், பிஞ்சு உடல் மீது தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செலுத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில், Stella தனது தாய், அத்தை மற்றும் தாத்தா பாட்டியுடன் குடியிருப்பில் இருந்துள்ளார். சிறுமியும் சடலத்தை தவிர மற்றவர்கள் யாரும் இன்னும் மீட்கப்படவில்லை.
மேலும், ஸ்டெல்லா இந்த இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட 3-வது குழந்தை ஆவார். முன்னதாக கடந்த புதன்கிழமையன்று Lucia Guara (4) மற்றும் Emma Guara (10) சகோதரிகளின் உடல் மீட்கப்பட்டது.