ஹமாஸ் படைகள் தொடர்பில் சொத்துக்கள் முடக்கம், விசா தடைகளை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்
ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவி அளிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் சொத்துக்கள் முடக்கம், விசா தடைகளை அறிவித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
இது இரண்டாவது முறை
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் படைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதிப்பது இது இரண்டாவது முறையாகும். இதுவரை 12 தனி நபர்கள் மற்றும் 3 நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஹமாஸ் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம், சூடான் நாட்டில் இரண்டு நிறுவனங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் மீதும் தடை விதித்துள்ளது.
ஹமாஸ் படைகளின் முதன்மை அதிகாரிகளில் ஒருவரான Maher Rebhi Obeid மீதும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் அக்டோபர் 7ம் திகதி முன்னெடுத்த தாக்குதலில் 1,195 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள், சிறார்கள் உட்பட்ட பொதுமக்கள்
அத்துடன் பணயக்கைதிகளாக பலரையும் பிடித்துச் சென்றனர். இதில் தற்போது 116 பேர்கள் காஸாவில் சிக்கியுள்ளனர். 42 பேர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படைகளுக்கு பதிலடியாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்டப்பட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 37,700 கடந்துள்ளதாக கூறுகின்றனர்.
பெரும்பாலும் பெண்கள், சிறார்கள் உட்பட்ட பொதுமக்கள் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, 27 ஐரோப்பிய நாடுகளும் காஸா போர் தொடர்பில் ஒருமித்த கருத்துக்கு வர இதுவரை போராடி வருவதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |