உலகின் முதல் கொரோனா நோயாளி ஒரு பெண்: வெளிவரும் புதிய தகவல்

coronavirus female Huanan
By Arbin Nov 20, 2021 09:35 AM GMT
Report

சீனாவின் பிரபலமான மாமிச சந்தையில் பெண் விற்பனையாளர் ஒருவருக்கே உலகில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வூஹான் நகரின் மத்தியில் அமைந்துள்ள கடல் உணவு மற்றும் மாமிச சந்தையில் விற்பனையாளரான பெண் ஒருவருக்கே முதலில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Wei Guixian என்ற குறித்த பெண்மணி 2019 டிசம்பர் 11ம் திகதி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடியுள்ளார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

குறித்த சந்தையில் இருந்தே, பலருக்கும் கொரோனா தொற்று பரவியதாகவும் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில் உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்த ஆய்வில், வூஹான் சந்தையில் இருந்து 20 மைல்கள் தொலைவில் ஒருவருக்கே முதன் முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கண்டறிந்தனர்.

அது உண்மையல்ல எனவும், குறித்த பெண் தான் உறுதி செய்யப்பட்ட முதல் நோயாளி எனவும் தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்ட முதல் கொரோனா நோயாளி 41 வயது கணக்கர் எனவும், அவர் வூஹான் சந்தையில் இருந்து 30 கி.மீ தொலைவில் குடியிருந்து வந்துள்ளார்.

2019 டிசம்பர் 8ம் திகதி அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். ஆனால் டிசம்பர் 16 வரையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பல் வலி காரணமாக சிகிச்சை தேடியதாகவும், அங்கிருந்தே சில வேளை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், வூஹான் சந்தையில் கடல் உணவுகளை விற்பனை செய்து வந்த Wei Guixian என்ற பெண்மணியே முதல் கொரோனா நோயாளி என்பதை தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US