முதல் குரங்கம்மை நோய் தொற்றை உறுதிபடுத்தியது அயர்லாந்து: தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கம்மை நோய் பரவல், அயர்லாந்திலும் தனது முதல் பாதிப்பு கணக்கை தொடங்கி இருப்பதாக அந்த நாட்டின் சுகாதார நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் ஒருவகை கொறித்துண்ணிகளிடன் இருந்து பரவும் இந்த குரங்கம்மை நோய் தொற்று, இதுவரை பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற 20 ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த குரங்கம்மை நோயை தடுக்க தனித்துவமான தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லாத நிலையில், பெரியம்மை நோய்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் தடுப்பூசிகள் இந்த நோயின் வீரியத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதுவரை 20 நாடுகள் வரை பரவி 200 பேர் வரை பாதிக்கப்பட்ட இந்த குரங்கம்மை நோய் தொற்று தற்போது அயர்லாந்திலும் தனது முதல் பாதிப்பு கணக்கை தொடங்கி விட்டதாக இருப்பதாக அந்த நாட்டின் சுகாதார நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்த...ரஷ்யா நடத்திய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை: வீடியோ காட்சி!
மேலும் சந்தேகிக்கப்படும் மற்றொரு வழக்கும் விசாரணை நடத்தி வருவதாகவும், ஆய்வு முடிவுகளுக்காக காத்து இருப்பதாகவும் அயர்லாந்தின் சுகாதார சேவை நிர்வாகி தெரிவித்துள்ளார்.