முதல்முறையாக அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பிரித்தானியாவில் சமீபத்தில் பரவிவரும் புதிய வகைக் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
"இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.1.7 எனும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் முதல் வழக்கை இன்று நாங்கள் கொலராடோவில் கண்டுபிடித்துள்ளோம்" என்று அம்மாகாணத்தின் ஆளுநர் ஜாரெட் பொலிஸ் ட்வீட் செய்துள்ளார்.
ஜாரெட் பொலிஸ் தனது அலுவலகம் மற்றும் மாநில சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை இணைத்துள்ளார். அதில், பாதிக்கப்பட்டுள்ள நபர் 20 வயதுள்ள ஆண் என்றும், அவர் தற்போது எல்பர்ட் கவுண்டியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக அவர் சமீபத்தில் எங்கும் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஏற்கெனெவே பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளும் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
Today we discovered Colorado’s first case of the COVID-19 variant B.1.1.7, the same variant discovered in the UK.
— Governor Jared Polis (@GovofCO) December 29, 2020
The health and safety of Coloradans is our top priority and we will monitor this case, as well as all COVID-19 indicators, very closely. pic.twitter.com/fjyq7QhzBi