முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை - மத்திய அரசின் புதிய திட்டம்
முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு, மத்திய அரசு ரூ.15,000 வழங்க உள்ளது.
ரூ.15,000 உதவித்தொகை
இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கும், நிறுவன உரிமையாளர்களுக்கும் மத்திய அரசு ஊக்கத்தொகைகளை வழங்க உள்ளது.
ரூ.99,446 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) என்னும் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம், 2 ஆண்டுகளில் 3 கோடியே 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ஒரு மாதம் ரூ.15,000 வரை மத்திய அரசு வழங்கும்.
மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இந்த ஊக்கத்தொகைக்கு தகுதியுடையவர்கள்.
முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை
இந்தத் தொகையை அரசு நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 2 தவணைகளில் செலுத்தும். முதல் தவணை 6 மாத சேவைக்குப் பிறகும், 2 வது தவணை 12 மாத சேவைக்குப் பிறகும், ஊழியர் நிதி கல்வியறிவுத் திட்டத்தை முடித்த பிறகும் செலுத்தப்படும்.
கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு, முதலாளிகளுக்கும் நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு நீடித்த வேலைவாய்ப்புடன் கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும், 2 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை முதலாளிகளுக்கு வழங்கப்படும்.
உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத்தொகை மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.
இந்த திட்டத்தின் பயன்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 2027ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி வரை உருவாக்கப்படும் வேலைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |