"முதலில் அமெரிக்கர்களுக்கு தான், மீதம் இருந்தால் பார்க்கலாம்" அதிரடி முடிவை எடுத்த ஜோ பைடன்
அமெரிக்க அரசாங்கம் முதலில் அமெரிக்கர்களுக்கு தான் COVID-19 தடுப்பூசிகளைக் கொடுக்கும், அதன்பிறகு இருக்கும் உபரியை உலக நாடுகளுக்கு வழங்க முயற்சிக்கும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், நாங்கள் முதலில் அமெரிக்கர்களை கவனித்துக்கொள்வதை உறுதிசெய்ய போகிறோம்.
அதன் பிறகு உபரி இருந்தால் அதை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வளரும் நாடுகளில் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) Covax திட்டத்துக்கு 4 பில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்கா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய ஜோ பைடன், உலகம் பாதுகாப்பாக இருக்கும் வரை அமெரிக்காவும் இறுதியில் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை, அதனால் மார் மாநாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்ய முயற்சித்தது வருவதாக அவர் கூறினார்.