ஆப்பிள் ஐபோன் 15 போனை தயாரிக்கவுள்ள இந்திய நிறுவனம்!
Apple-ன் ஐபோன் 15 சீரிஸ் மொபைல் போன்களை இந்தியாவன் டாடா நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய நிறுவனமான டாடா குழுமம் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் ஒப்பந்த தயாரிப்பாளரான விஸ்ட்ரான் தொழிற்சாலையை டாடா குழுமம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் கையகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஐபோன் தயாரிப்பு துறையில் இந்திய நிறுவனம் ஒன்று நுழைவது இதுவே முதல் முறை. கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் தொழிற்சாலையை டாடா குழுமம் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் கையகப்படுத்துகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 10000 பணியாளர்கள் உள்ளனர்.
தற்போது இந்த தொழிற்சாலையில் ஐபோன் 14 தயாரிக்கப்படுகிறது. விஸ்ட்ரான் நிறுவனம் 2024 வரை 180 கோடி ஐபோன்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. கையகப்படுத்தல் முடிந்தால், இந்தப் பொறுப்பு டாடா குழுமத்திடம் இருக்கும்.
ஆப்பிளின் முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தைவான் நிறுவனங்களான விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான். இந்த துறையில் இந்திய நிறுவனம் நுழைவது இந்தியாவின் மேக் இன் இந்தியா உற்பத்திக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
விஸ்ட்ரான் மூன்று மாதங்களில் இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர் மதிப்பிலான ஐபோன்களை அனுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Apple, iPhone 14, iPhone 15, Tata Group, tata manufacture iPhones in India, Wistron factory