ஸ்மார்ட்போனை பராமரிப்பது எப்படி?இந்த 7 டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்
இன்றைய உலகில் ஸ்மார்ட்போன் பயன்படுத்ததாவர்கள் மிகக்குறைவு. குழந்தைகள் முதல் முதியவர் வரை ஏறக்குறைய எல்லோர் கைகளிலும் இப்போது மொபைல்போன் உள்ளது. அந்த அளவிற்கு உலகில் ஸ்மார்ட்போன் தான் எல்லாமே என்ற நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கிறது.
தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, வேலை, பயணம், படிப்பு என எதோ ஒருவகையில் எல்லாவற்றிற்கும் மிகப்பெரிய உதவியாக இன்றைய ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அப்படியானால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதனை சரியாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும்.
அப்போதுதான் நமது ஸ்மர்ட்போன்கள் நீண்ட நாட்களுக்கு நன்றாக செயல்படும். உங்கள் மொபைல் போனை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்தும் அதன் ஆயுட்காலத்தை எவ்வாறு நீட்டிப்பது என்பது குறித்தும் சில டிப்ஸ்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
திடமான போன் கேஸ் மற்றும் ப்ரொடெக்ஷன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்
ஸ்மார்ட்போன் வாங்கியதும் செய்ய வேண்டிய முதல் வேலை, தப்பித்தவறி கிழே விழுந்தால் உடையாதவாறு பேக் கேஸ் மற்றும் தரமான ஸ்கிரீன் கார்டை உடனடியாக பொறுத்த வேண்டும். பல சூழல்களில் கை தவறி போன் கீழே விழும்போது இதுதான் உங்கள் போனை பாதுகாக்கும்.
கீறல், விரிசல் ஆகியவற்றை தாங்கக்கூடிய வகையிலும் தூசி, அழுக்குகள் சேராதவாறும் நம் போனுக்கு முழுமையான பாதுகாப்பை தரக்கூடிய பேக் கேஸையும் தரமான ஸ்கிரீன் கார்டையும் பயன்படுத்துங்கள். இதற்காக நீங்கள் செலவழிக்கும் சிறிய தொகை தான், உங்கள் போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
ஸ்மார்ட்போனை எப்போது சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் மொபைல் போன் நீண்டநாள் உழைக்க கூடியதாகவும் இருக்க வேண்டுமென்றால், அடிக்கடி போனை சுத்தம் செய்யவேண்டும். மென்மையான துணியை பயன்படுத்தி போனின் ஸ்கிரீனை துடைக்கவும், நமது விரல் ரேகைகள், தூசிகள் ஆகியவற்றை நீக்கவும். சுத்தம் செய்ய கடினமான பகுதிகளில் மற்றும் தூசியை நீக்க சிறிய பிரஷை பயன்படுத்துங்கள்.
போன் சூடாகாமல் தவிர்க்கவேண்டும்
உங்கள் மொபைல் போனை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்காதீர்கள். இல்லையென்றால் உங்கள் போன் சூடாகி உள்ளிருக்கும் பாகங்கள் பாதிப்படையும். அதேபோல் கடுமையான குளிரும் உங்கல் மொபைல் போன் பேட்டரியை தற்காலிகமாக குறைக்கும். ஆகவே எப்போதும் மிதமான வெப்பநிலையில் உங்கள் போனை வைத்திருங்கள். இதனால் உங்கள் போனின் செயல்திறனும் ஆயுட்காலமும் நீடிக்கும்.
ஸ்மார்ட்டாக சார்ஜ் செய்யுங்கள்
மொபைல் போன் பேட்டரி நீண்ட நாள் உழைக்க வேண்டுமென்றால், முறையாக சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் முழுதும் தீரும் வரை போனை உபயோகப்படுத்தாதீர்கள். அதேநேரம் பேட்டரிகளை 100 சதவீதம் முழுதும் சார்ஜ் செய்யாதீர்கள். 20% முதல் 80%, இதற்கு இடைபட்ட அளவுதான் சரியாக சார்ஜ் செய்யும் முறை. 20 சதவீதம் வரும்போது சார்ஜ் போடவேண்டும், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துகொண்டு எடுத்துவிடவேண்டும்.
ஸ்டோரேஜ் மற்றும் செயலியின் பயன்பாட்டை சரியாக பராமரியுங்கள்
மொபைல் போனின் செயல்திறன் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், ஸ்டோரேஜை சரியாக பராமரிக்க வேண்டும். மொபைல் ஸ்டோரேஜை அடைத்துக் கொண்டிருக்கும் தேவையில்லாத புகைப்படங்கள், வீடியோக்கள், செயலிகளை அழித்துவிடுங்கள். முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்களை சேமிப்பதற்கு க்ளவுட் சேவைகள் அல்லது கணினியை பயன்படுத்துங்கள். இதனால் உங்கல் மொபைல் போனின் ஸ்டோரேஜில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கும். அதேப்போல் மொபைல் பயன்படுத்துகையில் பின்னனியில் செயலிகள் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடும்.
உங்கள் மொபைல் போனை கவனமாக கையாளுங்கள்
உங்கள் மொபைல் போன் கீழே விழுந்து நொறுங்கி விடாமல் கவனமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் போனின் மீது கனமான பொருளையோ, அல்லது கவனமில்லாமல் போனின் மீது உட்காருவதையோ தவிர்க்கவேண்டும். சிம் கார்டு, மெமரீ கார்டு ஆகியவற்றை மாற்றும் போது உடையாதவாறு கவனமாக மாற்றவும். உங்கள் போன் வாடர்ஃப்ரூஃப் இல்லையென்றால், தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாஃப்ட்வேர் அப்டேட் செய்யுங்கள்
உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், மொபைல் போனின் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். பேட்டரி பவர் மற்றும் போனின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பாதிப்பை சரி செய்யவும் போன் தயாரிப்பாளர் அவ்வப்போது அப்டேட் வெளியிடுவார்கள். தானாகவே அப்டேட் ஆகும்படியாகவோ அல்லது அப்டேட் குறித்த தகவல் தெரிந்ததும் உங்கள் போனின் சாஃப்ட்வேரை புதிதாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட இந்த வழிமுறைகளை பின்பற்றினால் போதும் உங்கள் மொபைல் போன்கள் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும், பழுதாகாமல் சிறப்பாக இயங்கும். அடிக்கடி போனை ரிப்பேர் செய்யவேண்டிய, மாற்றவேண்டிய அவசியம் இருக்காது.