முதல் லெபனான் நாட்டு குடிமகன் விடுவிப்பு: இஸ்ரேல் அளித்துள்ள விளக்கம்
First Lebanon Prisoner Releases From Israel: லெபனான் நாட்டின் முதல் சிறைக்கைதியை இஸ்ரேலிய இராணுவம் விடுவித்துள்ளது.
லெபனான் நாட்டவர் விடுவிப்பு
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் இடையே 6 மாதங்களாக இடைவிடாத மோதல் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தூதரக முன்நகர்வு நடந்துள்ளது.
இதில், இஸ்ரேலிய காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லெபனானை சேர்ந்த ஒருவர் விடுவிக்கப்பட்டு அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC), மாலிக் காசி(Malek Ghazi) என்ற லெபனான் நாட்டு குடிமகன் விடுவிக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மாலிக் காசி லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள டயர் நகரில் அந்நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தெற்கு லெபனானில் கிட்டத்தட்ட 5 பொதுமக்கள் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மாலிக் காசி முதல் நபராக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் தரப்பு விளக்கம்
இந்நிலையில் லெபனான் நாட்டவர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், விசாரணையில் சம்பந்தப்பட்டவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு இல்லாத எளிய குடிமகன் என்பது தெரியவந்தது. அதன்படி அவரை தொடர்ந்து இஸ்ரேலில் தடுத்து வைப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்று விளக்கியுள்ளது.

இதற்கிடையில் மீதமுள்ள 4 லெபனான் நாட்டு குடிமகன்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என லெபனான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விடுதலைக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க தூதரக முயற்சிகளுக்கு தன்னுடைய ஆழ்ந்த நன்றியை லெபனான் பிரதமர் நவாப் சலாம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |