முதல் வரிசை பாதுகாப்பை உடைத்தது உக்ரைன் இராணுவம்: பின்னுக்கு தள்ளப்படும் ரஷ்ய படைகள்
கெர்சன் நகரின் முதல் வரிசை பாதுகாப்பை உக்ரைனிய படைகள் உடைத்துள்ளனர்.
இருநாட்டு படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெறுவதாக உக்ரைனிய ஜனாதிபதி அலுவலகம் தகவல்.
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனின் முதல் வரிசை பாதுகாப்பை உக்ரைனிய படைகள் உடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இந்த போர் தாக்குதலில் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் சரிவை சந்தித்ததை தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள நகரங்களை ரஷ்ய படைகள் தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருந்தனர்.
The Armed Forces of Ukraine have breached the occupiers' first line of defence near Kherson. They believe that Ukraine has a real chance to get back its occupied territories, especially considering the very successful use of Western weapons by the Ukrainian army.
— Stratcom Centre UA (@StratcomCentre) August 29, 2022
இந்தநிலையில் ரஷ்ய வீரர்களால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு பிராந்திய நகரமான கெர்சனில் இருநாட்டு படைகளுக்கும் இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்று வருவதாக உக்ரைனின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், தற்போது கெரசன் நகரில் உள்ள ரஷ்ய படைகளின் முதல்நிலை பாதுகாப்பை உக்ரைனிய ராணுவம் உடைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுத் தொடர்பாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், நாங்கள் சில திசைகளில் தாக்குதலைத் தொடங்கினோம், மேலும் இந்த நடவடிக்கையைப் பற்றி எங்களால் அதிக விவரங்களை கொடுக்க முடியாது, ஆனால் தாக்குதல் தொடங்கிவிட்டது. என்று தெரிவித்தார்.
Getty Images
கூடுதல் செய்திகளுக்கு: 300 பேருடன் சென்ற கப்பலில் தீவிபத்து: நடுக்கடலில் மீட்புப்பணி தீவிரம்
கருங்கடலில் உள்ள முக்கிய துறைமுக நகரத்தில் உள்ள உக்ரேனியப் படைகள் சமீபகாலமாக அங்குள்ள வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ரஷ்ய ராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
AP Photo