மிகப் பிரம்மாண்டமாய் கட்டியெழுப்படும் ”மூன் துபாய்” ஹோட்டல்: மலிவு விலையில் விண்வெளி சுற்றுலா
துபாயில் சந்திரனின் மேற்பரப்பினை பிரதியாக கொண்ட மூன் ரிசார்ட் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
துபாயின் வருடாந்திர சுற்றுலா பயணிகளின் வருகை இரட்டிப்பாக அதிகரிக்கும் என அறிவிப்பு.
துபாயில் சந்திரனின் மேற்பரப்பினை பிரதியாக கொண்ட அதி ஆடம்பரமான ஹோட்டல் ஒன்று விண்வெளி சுற்றுலா-வை வழங்குவதற்காக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது.
துபாய் அதிவேகமாகவே அனைத்து ஆடம்பரமான விஷயங்களுக்கும் தாயகமாக மாறி வருகிறது, அத்துடன் மிக உயர்ந்த கட்டிடங்கள், சொகுசு விடுதிகள், சுற்றுலா தளங்கள் என அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சுற்றுலாவிற்கு துபாய் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் துபாயில் சந்திரன் மேற்பரப்பை பிரதியாக கொண்டு ”மூன் துபாய்” என்ற மிக ஆடம்பரமான ரிசார்ட்டை கனேடிய கட்டிடக்கலை நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ்(Moon World Resorts ) கட்டி எழுப்பி வருகிறது.
மலிவான விலையில் விண்வெளி சுற்றுலா-வை வழங்குவதற்காக இந்த ரிசார்ட்டைக் கட்ட முன்வந்துள்ளதாக கனேடிய கட்டிடக்கலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ”மூன் துபாய்” (Moon Dubai ) ஆடம்பர ஹோட்டல் $5 பில்லியன் செலவில் 735 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானத்திற்கு மொத்தம் 48 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன் துபாய் ஹோட்டல் விருந்தோம்பல், பொழுதுபோக்கு, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளில் அமீரகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று கட்டிடக்கலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிறுவனர் சாண்ட்ரா ஜி மேத்யூஸ் தெரிவித்துள்ள கருத்தில், ”மூன் துபாய்” முழு MENA பிராந்தியத்திலும் வெற்றிகரமான நவீன கால சுற்றுலா திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகளாவிய முறையீடு, பிராண்ட் விழிப்புணர்வு மற்றும் தனித்துவமான பல ஒருங்கிணைந்த சலுகைகள் துபாயின் வருடாந்திர சுற்றுலா வருகைகளை இரட்டிப்பாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மகாராணியின் இறுதிச் சடங்கு திகதி அறிவிப்பு: பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறை
மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் துபாயை தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் அதன் கிளைகளுக்கான உரிமத்தை விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.