இந்தியாவில் ரயில் பயணம் செய்ய முதன் முதலாக வாங்கப்பட்ட டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முதன் முதலாக வாங்கப்பட்ட டிக்கெட் விலை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
எவ்வளவு விலை
தற்போது இந்தியாவில் தினம் தோறும் ரயில்வேயை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.போக்குவரத்திற்கு ரயில்வே துறை மிகப்பெரிய சக்தியாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் முதல் ரயில் பயண சேவை 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மும்பைக்கும் தானேவுக்கு இடையே தொடங்கியது. அப்போது வாங்கிய டிக்கெட் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்த சேவையானது 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டது. இந்த ரயிலில் முதல் வகுப்புக்கு 30 பைசாவும், 2 ஆம் வகுப்புக்கு 16 பைசாவும், 3 ஆம் வகுப்புக்கு 5 பைசாக்களும் வாங்கப்பட்டன.
இதையடுத்து, இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.1 மற்றும் முதல் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.2 வாங்கப்பட்டன.
பின்னர், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பயணிகள் ரயில்களை நிறுத்திவிட்டு டிக்கெட் விலையை ரூ.10ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தி, அதை எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களுடன் இணைத்தது.
அதேபோல ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலை ரூ.10 இல் இருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், 2021 நவம்பரில் இந்த கட்டணம் மீண்டும் ரூ. 10 ஆக குறைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |