பிரித்தானியாவில் அன்னப் பறவை கணக்கெடுப்பு தொடக்கம்
பிரித்தானியாவில் தேம்ஸ் நதியில் அன்னப் பறவைகளின் கணக்கெடுப்பு தொடங்கபட்டுள்ளது.
மன்னர் சார்ல்ஸ் பொறுப்பேற்ற பிறகு முதன்முறை
பிரித்தானியாவின் பாரம்பரிய நடைமுறையான அன்னப் பறவைகள் கணக்கெடுப்பு, மன்னர் சார்ல்ஸ் பொறுப்பேற்ற பிறகு முதன்முறை நடக்கிறது.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை, அந்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு அன்னப்பறவையும் அதிகாரபூர்வமாக மன்னருக்கு சொந்தமானது. அன்னப்பறவையின் இறகு பொருத்தப்பட்ட அலங்காரத் தொப்பி மன்னருடைய தனித்துவமான அடையாளம் ஆகும்.
credit: Aaron Chown/PA
அன்னப் பறவை கணக்கெடுப்பு
கணக்கெடுப்பு என்பது, தேம்ஸ் நதியில் உலவும் அன்னப் பறவைககளைப் பிடித்து அடையாளம் பதிவு செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் நதியில் விடப்படும்.
டேவிட் பார்பர் (David Barber) என்பவர் இந்த அன்னப் பறவை கணக்கெடுப்புக் குழுவை வழி நடத்துகிறார். இந்தக் கணக்கெடுப்பு 5 நாள் நீடிக்கும். கணக்கெடுப்புக் குழு நதியில் சுமார் 127 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்.
Credit: PA
கணக்கெடுப்பின்போது, பாரிய அன்னங்களின் கழுத்தில் அடையாள வளையம் அணியப்படும். குஞ்சுகளின் எடை பார்த்து வாயில் வித்தியாசம் தெரிகிறதா என்று சோதிக்கப்படும். உடல் நலத்தைத் தெரிந்துகொள்ள அது உதவும்.
பிரித்தானியாவில் இந்த அன்னப் பறவைகள் கணக்கெடுப்பு 12-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்கிறது.
? Swan Uppers toast His Majesty The King on Day One of Swan Upping 2023. pic.twitter.com/nzDDgTZVmF
— The Royal Family (@RoyalFamily) July 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
First Swan Upping, King Charles III, River Thames, Swan census