இன்று இலங்கை - தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் தொடக்கம்
செஞ்சூரியனில் இன்று இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இலங்கை அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
தென்ஆப்பிரிக்க அணி குயின்டான் டி காக் தலைமையில் களம் இறங்குகிறது. பாப் டு பிளிஸ்சிஸ், மார்க்ராம், டீன் எல்கர், வான்டெர் துஸ்சென் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருந்தாலும் காயத்தால் காஜிசோ ரபடா இல்லாதது அந்த அணிக்கு கொஞ்சம் பின்னடைவாகும்.
இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
இதற்கு முன்பு இலங்கையுடன் 4 டெஸ்டில் விளையாடி அனைத்திலும் தென்ஆப்பிரிக்க அணியே வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.