அண்ணனுக்கு நன்றி... இளவரசர் வில்லியம் குறித்து முதன்முறையாக ஹரி தெரிவித்துள்ள விடயம்
முதன்முறையாக அண்ணன் நான் சொன்னதை காது கொடுத்துக் கேட்டார், அண்ணனுக்கு நன்றி என ஹரி கூறிய ஒரு விடயம் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
முதன்முறையாக அண்ணனைக் குறித்து ஹரி தெரிவித்துள்ள நல்ல விடயம்
தனது ’ஸ்பேர்’ புத்தகத்தில் தனது குடும்பம் குறித்து மோசமான விடயங்கள் பலவற்றை ஹரி கூறியதாக தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், தற்போது முதன்முறையாக தனது அண்ணன் இளவரசர் வில்லியமைக் குறித்து ஹரி தெரிவித்துள்ள ஒரு நல்ல விடயம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Image: POOL/AFP via Getty Images
அண்ணனுக்கு நன்றி
தானும் தன் மனைவி மேகனும் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன், தன் அண்ணன் வில்லியமுடன் மனதுவிட்டு பேசிய ஒரு தருணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் ஹரி.
ஹரி மேகனுடைய உதவியாளர் ஒருவரின் நெருங்கிய நண்பர் ஒருவர், தன்னையும் மேகனையும் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு லீக் செய்வதற்காக பணம் பெறுவதைக் குறித்து வில்லியமிடம் தெரிவித்த ஹரி, தன் மனைவிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
அதைக் கேட்டதும், வழக்கம் போல அண்ணல் லெக்சர் அடிப்பார் என்று எண்ணினேன். ஆனால், அவர் நான் சொன்னதைக் கவனமாக காது கொடுத்துக் கேட்டதுடன், ஆழ்ந்த சிந்தனையுடன், தனக்கும் அண்ணி கேட்டுக்கும் அந்த சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார் என்று கூறியுள்ளார் ஹரி.
Image: Getty Images
தன அந்த விடயத்தைக் கவனிப்பதாக வில்லியம் கூற, தொடர்ந்து பேசலாம் என இருவரும் முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஹரி.
இதுவரை ராஜ குடும்பத்தைக் குறித்து ஹரி மோசமான விடயங்கள் கூறியுள்ளதாகவே தகவல்கள் வெளியான நிலையில், அண்ணன் நான் சொன்னதைக் காது கொடுத்துக் கேட்டார், அண்ணனுக்கு நன்றி என ஹரி கூறும் ஒரு விடயமும் அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, முதன்முறையாக ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.