40 ஆண்டுகளில் முதல் முறையாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் இந்திய பிரதமர்! நரேந்திர மோடி நெகிழ்ச்சி பதிவு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பதிவிட்டுள்ளார்.
விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா செல்கிறார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு செல்ல உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், ''அடுத்த மூன்று நாட்களில் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவில் இருப்பேன். இந்தியா காலப்போக்கில் நட்புறவை சோதித்துள்ள இந்த நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்த பயணங்கள் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் தொடர்பு கொள்வதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
Over the next three days, will be in Russia and Austria. These visits will be a wonderful opportunity to deepen ties with these nations, with whom India has time tested friendship. I also look forward to interacting with the Indian community living in these countries.…
— Narendra Modi (@narendramodi) July 8, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |