செயற்கை நுண்ணறிவின் ஆபத்து குறித்த முதல் ஐ.நா பொதுக்கூட்டம்: தலைமை தாங்கும் பிரித்தானியா
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்த வாரம் நடைபெற உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஐ.நா கூட்டம்
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (AI) உள்ள ஆபத்துகளை குறைத்து, அதை உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.
reuters
இதில் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் முன்னெடுக்க உலக நாடுகளுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுழற்சி முறை தலைமையில் இந்த மாதம் பிரித்தானியா தலைமை பொறுப்பு வகிக்கிறது, மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) ஒழுங்குமுறைக்கு உலகளவிலான தலைமயை உற்று நோக்குகிறது.
செவ்வாய் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்திற்கு பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்(AI) ஆபத்துகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI கண்காணிப்பு அமைப்பு
கடந்த ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் போன்று, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் AI கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்ற சில செயற்கை நுண்ணறிவு அதிகாரிகளின் முன்மொழிவை ஆதரித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு(AI) நிர்வாக செயல்பாடுகளை தொடர்ந்து மறுசீராய்வு செய்வதற்கு,சட்டம், பொது நலன் மற்றும் மனித உரிமைகளுடன் எவ்வாறு அவற்றை ஒத்து போக செய்வது என்பதற்கு ஆலோசனை வழங்கவும் உயர்மட்ட அளவிலான AI ஆலோசனை குழுவை இந்த ஆண்டின் இறுதிக்குள் பணியில் அமர்த்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |