கனடா எல்லை திறக்கப்பட்டதும் முதல் ஆளாக ஓடி வந்த பெண்! இரண்டு ஆண்டிற்கு பிறகு காத்திருந்த மகிழ்ச்சி செய்தி!
கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவுடனான கனடாவின் எல்லைகள் திறக்கப்பட்ட நிலையில் Gina Chirco என்ற இளம்பெண் முதல் ஆளாக கனடாவுக்குள் ஓடோடி வந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வசித்து வரும் Chircoவும், ஒன்ராறியோவில் வாழும் Tony Faneliவும் காதலித்து வருகின்றனர்.
கொரோனாவால் இவர்களது திருமணம் தள்ளிக்கொண்டே சென்றதால் கொரோனா கட்டுப்பாடுகள் விலகியவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் Gina Chircoவின் தாய் உடல்நிலை மோசமடைந்ததால் இறந்துவிட்டார், அந்நேரத்தில் Ginaவிற்கு ஆதரவாக இருக்க முடியவில்லையே அவரது காதலர் மிகவும் வருத்தப்பட்டார்.
இந்நிலையில் எல்லைகள் திறக்கப்பட்டதும், மகிழ்ச்சியான திருமண நிகழ்வுக்காக இரு குடும்பங்களும் ஒன்றிணைந்துள்ளனர்.
தற்போது முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் மட்டும் கனடாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கனடாவுக்குள் நுழைய எந்தவித ஆவணங்களும் தேவையில்லை என்ற போதும், பயணம் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.