மீன் தலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
உலகில் சத்துக்கள் நிரம்பிய உணவுகளில் மீனும் ஒன்று.
மீனின் தலையில் கல்சியம் , பொட்டாசியம், வைட்டமின், மெக்னீசியம் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது . மேலும் பெண்களுக்கு தேவையான கொழுப்பு அமிலம் உள்ளது.
கண்பார்வையை அதிகரிக்கும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வாரத்துக்கு 2 மற்றும் 3 நாள் மீன் சாப்பிட்டு வருவது நல்லது.
அதுமட்டுமின்றி மீனில் எவ்வளவு சத்து இருக்கிறதோ அதே அளவு மீன் தலையிலும் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் மீன் சாப்பிடும் போது மீன் தலையையும் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.
அந்தவகையில் தற்போது மீன் தலை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- மீன் தலை அடிக்கடி சாப்பிடுவதால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறையும் .
- நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
- மீன் தலையில் வைட்டமின் டி (Vitamin-D) இருப்பதால் நீரிழிவு நோய் நீக்கும்.
- மீன் தலையை சாப்பிடுவதால் உடல் கொழுப்பை குறைக்கும்.
- தாம்பத்திய பிரச்சினைகள் தீரும் ஏனென்றால் பெண்ணின் ஹார்மோன் அதிகரிக்கும்.
- பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும் வயிறு வலி இல்லாமல் தடுக்க உதவும்.
குறிப்பு
எல்லாவகை மீனும் நல்லது அல்ல ,நல்ல தண்ணீரில் வளரும் மீனை விட உப்பு தண்ணீரில் வளரும் மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலுக்கு மிகவும் நல்லது.