ஆசிய உணவகங்களின் மீன் வடிவ பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை: பிரபல நாடு அதிரடி முடிவு
அவுஸ்திரேலியாவில் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன் வடிவ சோயா சாஸ்-க்கு தடை
அவுஸ்திரேலியாவின் தெற்கு மாகாணங்களில் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய உத்தரவில், கடைகள் மற்றும் உணவகங்களில் திங்கட்கிழமை முதல் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்களை விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்
சிறிய மீன் வடிவ போத்தல்கள் உலகம் முழுவதும் உள்ள ஆசிய உணவகங்களில் பிரபலமாக உள்ளது.
ஆனால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய இந்த போத்தல்கள் நூற்றாண்டுகளுக்கான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன என அவுஸ்திரேலிய துணை பிரதமர் சூசன் க்ளோஸ் தெரிவித்துள்ளார்.
2023 ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தை தொடர்ந்து இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தின் படி, பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ராக்கள் உட்பட பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |