வலையில் சிக்கிய தங்க மீன்கள்.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்! பின்பு நடந்த சுவாரசிய சம்பவம்
மும்பையில் மீனவர் வீசிய வலையில் சிக்கிய தங்க மீன்களையடுத்து ஒரே இரவில் கோடீஸ்வராக மாறியுள்ளார்.
மும்பையில் உள்ள மர்பி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகாந்த் டாரே. இவர் அதே பகுதியில் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். மீன்கள் இனப்பெருக்க காலத்தை ஒட்டி வழக்கம் போல மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடைகாலம் முடிவடைந்த நிலையில் தனது படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது முதல் நாளிலேயே இது வரை இல்லாத அளவிற்கு மீன்கள் கொத்து கொத்தாக சிக்கியுள்ளது. சந்திரகாந்த் வலையை உடனடியாக இழுத்ததில் அதில் சுமார் 150 கோல் வகையான மீன்கள் வரை இருந்தன.
அவருடன் மீன்பிடிக்கச் சென்றவர்கள் வலையில் சிக்கிய மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டனர். கோல் மீன்களில் அதிக மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. இதனால் இவை விலை அதிகமாக போக கூடும்.
இதனை தங்க இதயம் கொண்ட மீன் என அழைப்பார்கள். இந்த மீனின் பாகங்கள் மூலம் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதால் இவைகளுக்கு தனி சிறப்பு உண்டு.
இதையடுத்து கரைக்கு திரும்பிய சந்திரகாந்த் அதிசய மீன்களை ஏலம்விட்டு சுமார் 1.33 கோடி ரூபாயை சம்பாதித்து ஒரே இரவில் கோடீஸ்வராக மாறியுள்ளார்.