கைகள் நிறம் மாறின!கண்கள் பெரிதாகின: தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தி
சமூக ஊடகங்களில் தடுப்பூசி குறித்து போடப்பட்ட கருத்துகளால், தடுப்பூசி போடாமல் இருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு குழந்தைகளின் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்காவின் Angola-வை சேர்ந்தவர் Nuria Daniela Gomes. 38 வயது மதிக்கத்தக்க இவர் லிவர்பூலில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2-ஆம் திகதி(டிசம்பர் 2021), கொரோனாவிற்கான பரிசோதனை செய்து, அவருக்கு நேர்மறையான முடிவு வந்த 7 நாட்களிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவருடைய நெருங்கிய நண்பரான Ms Tando பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அவளை தடுப்பூசி போடும் படி வற்புறுத்தினேன்.
ஆனால், அவளோ தடுப்பூசி போடுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக தடுப்பூசியின் விளைவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வரும் விஷயங்களை உண்மை என்று நம்பி, பயம் காரணமாக தடுப்பூசி போடவில்லை.
நான் அவளை மிகவும் இழக்கிறேன். கடந்த 7(டிசம்பர் 2021)-ஆம் திகதி அவளுக்கு இருமல் இருந்துள்ளது. அந்த நாள் எனக்கு நள்ளிரவு 1 மணிக்கு ஒரு மிஸ்டு கால் வந்திருந்தது.
இதையடுத்து உடனடியாக அழைத்த போது, அவரது தாயார் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறினார். அதன் பின், டிசம்பர் 9-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில்,அவள் இறந்துவிட்டதாக செய்தி வந்தது.
இது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் அவளிடம் ஒரு வாரத்திற்கு முன்பு தான் பேசிக் கொண்டிருந்தேன், இப்போது அவள் இல்லை என்று நினைக்கும் போது, நம்பவே முடியவில்லை என்று கூறினார்.
மேலும், Nuria Daniela Gomes-ன் மகள் Erica, தனது தாயின் உடல்நிலை குறித்து கூறுகையில், அம்மா முதலில் தனியாக தூங்க விரும்பவில்லை. இதனால், நாங்கள் அனைவரும் அறையில், ஒரு மெத்தையை வைத்தோம். அப்போது அவர் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அப்போது அவரிடம் நான் கேட்ட போது, நன்றாக இருப்பதாகவே கூறினார்.
அதன் பின் வீட்டில் லைட்டை ஆன் செய்து பார்த்த போது, அவருடைய கைகள் ஊதா நிறமாகவும், உதடுகள் ஊதா நிறமாகவும், கண்கள் பெரிதாகவும் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்தோம். துணைமருத்துவர்கள் வரும் வரை CPR செய்து கொண்டே இருந்தனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே இறந்துவிட்டார்.
இது எல்லாம் வேகமாக நடந்துவிட்டது. சிறுவயதில் எங்களை அம்மா பார்த்துக் கொண்டார். கடின உழைப்பாளி, அழகானவர், அக்கறையுள்ளவர் . எங்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். அவரிடம் ஒரு தாய் போன்று இல்லாமல் நண்பன் போன்று நெருக்கமாக இருந்தோம்.
அவர் போன்று யாரும் இருக்க முடியாது என்று வேதனையுடன் கூறினார்.
உயிரிழந்த Nuria Daniela Gomes-க்கு Erica(20) மற்றும் Myra (17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பு நல்ல உடல் நிலையிலே இருந்துள்ளார்.
திடீரென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். தடுப்பூசி போட்டிருந்தால், ஒருவேளை அவர் பிழைத்திருக்கலாம், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை உண்மை என்று நம்பியதால், தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
தடுப்பூசி போட மறுக்கும் Nuria Daniela Gomes-ன் மரணம் ஒரு எச்சரிக்கை செய்தி.