கிரிப்டோ சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திய ட்ரம்ப்., அமெரிக்காவின் கையிருப்பாக 5 நாணயங்கள் தெரிவு
ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு புதிய மூலோபாய கையிருப்பின் ஒரு பகுதியாக கிரிப்டோகரன்சியை சேமிக்கவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான crypto holdings-ல் 5 முக்கியமான டோக்கன்களை சேர்ப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது Truth Social-இல் வெளியிட்ட பதிவில், XRP, SOL, ADA ஆகிய மூன்று குறைவாக அறியப்படும் டோக்கன்களை தெரிவு செய்தது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதன் பின்னர், Bitcoin மற்றும் Ether ஆகிய இரண்டு முக்கிய கிரிப்டோக்களையும் சேர்த்ததாக அறிவித்தார்.
ட்ரம்ப் தேர்வு செய்த 5 கிரிப்டோ கரன்சிகள்
1. XRP (Ripple)
- 140 பில்லியன் டொலர் மதிப்புள்ள மொத்த XRP டோக்கன்கள் புழக்கத்தில் உள்ளன.
- இந்த டோக்கன் பண பரிமாற்றத்தை வேகமாகவும் குறைந்த செலவிலுமாக செய்ய உதவுகிறது.
- Ripple நிறுவனம் அமெரிக்க அரசியல் லாபியிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. SOL (Solana)
- Solana-வில் 73 பில்லியன் டொலர் மதிப்புடைய டோக்கன்கள் புழக்கத்தில் உள்ளன.
- ட்ரம்ப் அறிமுகப்படுத்திய தனிப்பட்ட கிரிப்டோ டோக்கனும் Solana Blockchain-ல் உருவாக்கப்பட்டது.
- 2022-ல் FTX CEO சாம் பேங்க்மேன்-பிரைட் தொடர்பால் பாதிக்கப்பட்டது.
3. ADA (Cardano)
- 31.4 பில்லியன் டொலர் மதிப்புடைய ADA டோக்கன்கள் புழக்கத்தில் உள்ளன.
- 2021-ல் Ether-க்கு மாற்றாக உருவாக்கப்பட்டது.
- ட்ரம்ப் அறிவிப்பு வந்தவுடன் 70% உயர்வு கண்டது.
4. Bitcoin
- Bitcoin தான் முதன்மையான மற்றும் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி ஆகும்.
- 1.7 டிரில்லியன் டொலர் மதிப்புடைய டோக்கன்கள் புழக்கத்தில் உள்ளன.
- 2024-ல் SEC ஒப்புதலுடன் ETF-களில் சேர்க்கப்பட்டதால் விலை உயர்வு கண்டது.
5. Ether (Ethereum)
- Ethereum முக்கியமான DeFi Blockchain ஆகும்.
- Trump மற்றும் அவரது மகன்கள் தொடங்கிய World Liberty Financial நிறுவனம் இதை பயன்படுத்தி $500 மில்லியன் டோக்கன்களை விற்றுள்ளது.
ட்ரம்பின் இந்த முடிவு கிரிப்டோ மார்க்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |