தப்பிய 5 சிங்கங்கள்... 30 நொடிகளில் வெளியேற சொன்ன குடும்பம்: மரண பயத்தைக் காட்டிய தருணம்
சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு, விடிகாலை 4 மணிக்கு கண் விழித்துள்ளனர்.
30 நொடிகள் கால அவகாசம், உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்லுங்கள்
சிட்னியின் தாரோங்கா உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்கள் தப்பிய நிலையில், அந்த பூங்காவில் தங்கியிருந்த இளம் குடும்பத்திற்கு வெளியேற 30 நொடிகள் மட்டுமே அவகாசம் அளித்திருந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னி தம்பதி மேக்னஸ் மற்றும் டொமினிக் பெர்ரி ஆகியோர் தங்களது இரு மகன்களுடன் தாரோங்கா உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று குடில் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் தான் சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு, விடிகாலை 4 மணிக்கு கண் விழித்துள்ளனர்.
@nine
பொதுவாக தாரோங்கா உயிரியல் பூங்காவில் மிருகங்களின் அச்சமூட்டும் சத்தங்களையே சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க விளம்பரமாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் புதன்கிழமை சிங்கங்களின் கர்ஜனை மற்றும் முறுவல் சத்தம் கேட்டதும், அவை கூண்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் பயப்படத் தேவையில்லை என கருதியுள்ளார்.
6.40 மணியளவில் காதைப் பிளக்கும் எச்சரிக்கை மணி அந்த உயிரியல் பூங்காவில் ஒலித்துள்ளது. மட்டுமின்றி பூங்கா ஊழியர்கள் விரைந்து சென்று குடில் அமைத்து தங்கியிருந்த மக்களை எழுப்பி, சிங்கங்கள் தப்பியதாக எச்சரித்து வந்துள்ளனர்.
மேலும், உடமைகள் குறித்து கவலை வேண்டாம், உங்களுக்கு 30 நொடிகள் மட்டுமே கால அவகாசம், உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.
@dailymail
இதனையடுத்து பெர்ரி குடும்பத்துடன் சுமார் 50 சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சிங்கங்களில் நான்கு தாமாகாவே கூண்டுக்குள் சென்றுள்ளது. இன்னொன்றை மயக்கமடையச் செய்யும் துப்பாக்கியால் சுட்டு, பிடிகூடியுள்ளனர்.
சிங்கங்களுக்கு பயந்து பதுங்கியிருந்த அந்த ஒன்றரை மணி நேரமும் மரண பயத்தைக் காட்டிய தருணம் என பெர்ரி குறிப்பிட்டுள்ளார்.
பூங்கா நிர்வாகம் தெரிவிக்கையில், 10 நிமிடங்களில் சிங்கங்களை கூண்டுக்குள் அடைத்துள்ளதாகவும், நிலமை கட்டுக்குள் கொண்டுவர துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.