வெளிநாடொன்றில் இந்திய வம்சாவளியினர் ஐந்து பேருக்கு பிரம்படி, சிறை
சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியினர் ஐந்து பேருக்கு பிரம்படியும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினர் ஐந்து பேருக்கு தண்டனை
சிங்கப்பூரில், ஒருவர் பலியாக காரணமாக அமைந்த கலவரம் ஒன்றை ஏற்படுத்தியது தொடர்பில் இந்திய வம்சாவளியினர் ஐந்து பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதரன் இளங்கோவன், மனோஜ்குமார் வேலாயுதம், சஷிகுமார் பக்கிர்சாமி, புத்தன்வில்லா கீத் பீற்றர் மற்றும் ராஜா ரிஷி என்பவர்களே தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள்.
அவர்களுக்கு, குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ப, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் சிறையும், பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 19ஆம் திகதி, Concorde ஹொட்டலிலுள்ள மதுபான விடுதியில் மேற்குறிப்பிட்டவர்கள் உட்பட சுமார் 10 பேர் மது அருந்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அந்த மதுபான விடுதியில் முன்பு பவுன்சராக பணியாற்றியவரான முகமது இஸ்ராத் முகமது இஸ்மாயில் (29) என்பவர், தனது திருமண அழைப்பிதழை அந்த மதுபான விடுதி ஊழியர்களுக்குக் கொடுப்பதற்காக, தனது நண்பரான முகமது ஷாரூல்நிஸாம் ஓஸ்மான் (30) என்பவருடன், விடுதி முன் காத்திருந்திருக்கிறார்.
அப்போது, இஸ்ராத்துக்கும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்ற, இஸ்ராத் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இஸ்ராத், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |