மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்கும் ஐந்து எளிமையான உடற்பயிற்சிகள்! பெண்களே கட்டாயம் செய்யுங்க
பொதுவாக மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம்.
அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்
இந்த சமயங்களில் ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் தற்போது மாதவிடாய் வலியை குறைக்க கூடிய சில உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
யோகா பயிற்சி
உடல் மட்டுமின்றி, மனதுக்கும் சேர்த்து யோகா பயிற்சி செய்யலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணத்தால், மாதவிடாயின் மனநிலையில் நிமிடத்துக்கொரு முறை மாறுதல் ஏற்படும்.
யோகா பயிற்சி செய்வது உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுவதோடு, மனதையும் அமைதி படுத்துகிறது. உடல் தசைகள் தளர்வடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வலி பெருமளவு குறையும்.
ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள்
உடலில் உதிரப் போக்கு ஏற்படுவதால், மிகவும் சோர்வாக உணர்வீர்கள். நாள் முழுவதும் ஓய்வாக இருக்கலாமா என்று தோன்றும். உடலின் தசைகளை தளர்ததி, வலியை குறைத்து, கொஞ்சம் ஆற்றலை அதிகரிக்க, எளிமையான ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்யலாம்.
நடனம்
மாதவிடாயின் போது, நடனமா என்று கேட்கலாம்? நீங்கள் விரும்பும் பாடலுக்கு அல்லது இசைக்கு உங்கள் மனம் விரும்பும் வகையில் நடனம் ஆடுவது, உங்களை ரிலாக்ஸ் செய்ய உதவும். நடனம் மனதை உற்சாகப்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
நடைபயிற்சி
எந்த விதமான உடற்பயிற்சியாக செய்தாலும், நடைபயிற்சி உட்பட, உடலில் எண்டார்ஃபின்ஸ் என்ற ஹார்மோன் சுரக்க உதவும். இந்த ஹார்மோன் மூளையில் வலியை உணரும் ரிசப்ட்டார்சை நிறுத்தி, உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. இது, மாதவிடாய் வலியை குறைக்கிறது.