அமெரிக்காவின் விமான விபத்து: குவிந்த மீட்பு படையினர்: ஓடுபாதை தற்காலிகமாக மூடல்
அமெரிக்காவின் மெய்ன் நகர விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தை தொடர்ந்து ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விமான விபத்து
அமெரிக்காவின் மெய்ன்(Maine) மாகாணத்தின் பேங்கர் சர்வதேச விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக விமான ஒன்று புறப்படத் தயாரான போது விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தை விமான நிலைய நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் உயிரிழப்புகள் அல்லது விபத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு காரணத்தையும் விமான நிலைய நிர்வாகம் வெளியிடவில்லை.
*AIRCRAFT CRASH AT MAINE'S BANGOR INTERNATIONAL AIRPORT: LOCALS pic.twitter.com/BN84wZiH1A
— NewsWire (@NewsWire_US) January 26, 2026
இந்த விபத்து சம்பவம் குறித்த முதற்கட்ட தகவல் வெளியாகி வரும் நிலையில், சம்பவ இடத்துக்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு படையினர் குவியத் தொடங்கியுள்ளனர்.
விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட சமூக வலைத்தள அறிவிப்பில், விமான நிலையத்திற்கு பயணிகள் வருவதை தவிர்க்கவும், தற்காலிகமாக விமான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் விவரம்

Flightradar24 தரவுகளின் படி, Bombardier Challenger 650 ரக தனியார் ஜெட் விமானம் இந்த விபத்தில் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த விமானத்தில் 12 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |