வானத்தில் இருந்து பறந்து வந்து சாலையில் விழுந்த விமானம்! உள்ளிருந்தவர்கள் நிலை? பரபரப்பு வீடியோ
அமெரிக்காவில் விமானம் ஒன்று சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய புளோரிடா பல்கலைக்கழக வளாகத்திற்கு மேற்கே உள்ள ஆரஞ்சு கவுண்டியில் ஒரு விமானம் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதை, ஆரஞ்சு கவுண்டி தீயணைப்பு துறையினர் உறுதி செய்துள்ளனர். அதன்படி விமானம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ACCIDENT: Pilot suffers minor injuries after making emergency landing on a road in Orlando, Florida. The plane was on a maintenance flight at the time of the crash. https://t.co/WSOh2n8vto pic.twitter.com/2hnVgCRLo6
— Breaking Aviation News & Videos (@aviationbrk) August 20, 2022
விமான நிறுவனத்தின் தலைவர் ரெமி கொலின் (40) கூறுகையில், தரையிறங்கும் நேரத்தில், குறிப்பிட்ட அந்த விமானம் பராமரிப்பு விமானமாக இருந்து வந்துள்ளது. என்ஜின் செயலிழப்புதான் காரணம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த அமண்டா ஸ்கூபா, நாங்கள் காரை ஓட்டி செல்லும்போது, விமானம் மிகவும் தாழ்வாக வருவதை கண்டோம். முதலில், அது மிகவும் தாழ்வாகப் பறக்கிறது என்று நினைத்தோம். பின்னர் திடீரென்று அது எங்களை நோக்கி வந்தது. கடைசி நொடியில் அது சாலையின் மறுபுறம் நகர ஆரம்பித்தது என பதற்றம் விலகாமல சொன்னார்.
https://t.co/mRGUTnkvVI pic.twitter.com/w6MT4WZnQz
— OCFire Rescue (@OCFireRescue) August 19, 2022