விமானியே இல்லாமல் பறந்த பயணிகள் விமானம் ஒன்று... விசாரணையில் வெளிவந்த பின்னணி
பிராங்பேர்ட்டிலிருந்து ஸ்பெயினுக்குச் சென்ற ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் விமானம் ஒன்று 10 நிமிடங்கள் வரையில் விமானி இல்லாமல் பயணித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விமானியின் அறையில்
கடந்த ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் விமானியின் அறையில் நடந்த ஒரு சிறு சம்பவமே காரணம் எனவும் தெரிய வந்துள்ளது. வெளியான அறிக்கையின் அடிப்படையில், விமானத்தின் துணை விமானி விமானி அறையில் தனியாக இருந்தபோது மயக்கமடைந்தார் என்றே கூறப்படுகிறது.
பிப்ரவரி 17, 2024 அன்று, பிராங்பேர்ட்டிலிருந்து ஸ்பெயினின் செவில்லுக்குச் செல்லும் விமானத்தி துணை விமானி, முதன்மை விமானி கழிவறையில் இருந்தபோது மயக்கமடைந்துள்ளார்.
199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் பயணித்த அந்த விமானம், விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்துள்ளது. இந்த நிலையில், வெளியான அறிக்கை தொடர்பில் தங்களின் கவனத்திற்கு வந்ததாகவும் லுஃப்தான்சா நிறுவனம் சார்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
autopilot முறை
விசாரணை அறிக்கையில், மயக்கமடைந்த துணை விமானி, கட்டுப்பாடுகளை தற்செயலாக இயக்கியதாகத் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, autopilot முறை செயலில் இருந்ததால் விமானம் நிலையான முறையில் தொடர்ந்து பறக்க முடிந்தது என்றும் கண்டறிந்துள்ளனர்.
இதனிடையே, முதன்மை விமானி அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்ற பிறகு, விமானம் மாட்ரிட்டில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொண்டது. அத்துடன் துணை விமானி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |