ஜேர்மனியில் 11 விமான நிலையங்களின் பணியாளர்கள் வேலை நிறுத்தம்: விவரம் செய்திக்குள்
ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம் உட்பட, 11 முக்கிய விமான நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
11 விமான நிலையங்களின் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம் உட்பட, 11 முக்கிய விமான நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர் யூனியனான Verdi அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, அதாவது, திங்கட்கிழமை அதிகாலை 12.00 மணிக்கு இந்த வேலை நிறுத்தம் துவங்க உள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களில், பயணிகளின் உடைமைகளைக் கையாளும் பணியாளர்கள் 23,000 பேரும் அடங்குவர்.
பிராங்பர்ட் விமான நிலையத்தைப் பொருத்தவரை, திங்கட்கிழமை விமானங்கள் எதுவும் புறப்படாது என்றும், பயணிகள் யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துவிட்டார்கள்.
இந்த வேலைநிறுத்தத்தால், 150,000 பயணிகள் பாதிக்கப்பட இருப்பதாகவும் பிராங்பர்ட் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |