ஃப்ளிப்கார்ட் Big Billion Days 2026 - iPhone 17, Nothing, Samsung போன்களுக்கு சலுகை
Flipkart Big Billion Days 2026 Deals: ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026-ல் iPhone 17, Nothing, Samsung உள்ளிட்ட பிராண்டட் போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 9
இந்தியாவின் மிகப்பெரிய ஓன்லைன் விற்பனை விழாவாக விளங்கும் Flipkart Big Billion Days Sale 2026 அக்டோபர் 9 முதல் தொடங்குகிறது.
Flipkart Plus மற்றும் VIP உறுப்பினர்கள், Axis/ICICI வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் அக்டோபர் 8-ஆம் திகதி முதல் முன்கூட்டியே சலுகைகளைப் பெற முடியும்.

பிராண்டட் போன்களுக்கு சலுகைகள்
இந்த ஆண்டு, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் உள்ளிட்ட பல பிரிவுகளில் விலை குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
iPhone 17 முக்கியமாக கவனத்தை ஈர்க்கிறது. 256GB மாடல் விலை ரூ84,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. Axis/ICICI வங்கி கார்டு சலுகை மற்றும் எக்சேஞ்ச் போனஸ் பயன்படுத்தினால், விலை ரூ.79,999 வரை குறையலாம்.
Nothing Phone (4a, 4b, Pro) மாடல்கள் ரூ.27,999 முதல் ரூ.49,999 வரை விற்பனைக்கு வருகின்றன. Nothing Ear, Buds, Watch போன்ற ஆடியோ மற்றும் அணிகலன்களும் 30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
Samsung Galaxy Book4 லேப்டாப்கள் ரூ.47,990 முதல் தொடங்குகின்றன. Galaxy S25, S25 FE, A36 போன்ற ஸ்மார்ட்போன்கள் ரூ.30,000-ரூ.60,000 விலையில் கிடைக்கும் என Flipkart அறிவித்துள்ளது.
மேலும், Flipkart EMI, Pay Later, UPI வழியாக கூடுதல் தள்ளுபடிகள், No Cost EMI சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த Big Billion Days 2026 விற்பனை, இந்தியாவில் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கும் நிகழ்வாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |