Flipkart Big Billion Days Sale 2025: ஐபோன் 15-யை ரூ.50,000க்கும் குறைவான விலையில் வாங்குவது எப்படி?
Flipkart Big Billion Days Sale 2025 மூலம் Apple iPhone 15 போனை ரூ.50,000க்கும் குறைவான விலையில் வாங்குவதற்கான விவரங்கள் உள்ளே.
எவ்வாறு?
பிளிப்கார்ட் போன்ற மின்வணிக நிறுவனங்கள் விரைவில் பிக் பில்லியன் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட் போன்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்க உள்ளன.
செப்டம்பர் 22 முதல் பிளிப்கார்ட்டில் தொடங்கும் விற்பனை மூலம் iPhone 15 போனை ரூ.64,900 விலையில் இருந்து வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்ற ஒப்பந்தங்களின் உதவியுடன் ரூ.50,000 க்கும் குறைவான விலையில் பெறலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட Credit மற்றும் Debit கார்டுகளுக்கு பிளிப்கார்ட் வங்கி தள்ளுபடிகள் மூலம் பல ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
கூடுதலாக பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், அதை exchange bonus ஆக மாற்றலாம். இந்த சலுகைகள் அனைத்தும் சேர்ந்து, ரூ.66,900 விலையில் இருந்து ரூ.50,000க்கும் குறைவான விலையில் பெற அனுமதிக்கிறது.
ஐபோன் 15 போனில் 6.1-inch Super Retina XDR display, உள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு 48MP primary camera மற்றும் 12MP ultra-wide cameraவுடன் வருகிறது. நாள் முழுவதும் பேட்டரி மற்றும் MagSafe சார்ஜிங் மூலம், உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்வது எளிதானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |